தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க... | AMMK candidate Michael Rayappan Election Campaign - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

சினிமா, அரசியல் என்று  இரண்டு முகம் கொண்ட மைக்கேல் ராயப்பனுக்குப் பூர்வீகம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை. ‘நாடோடிகள்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’ ‘பட்டத்து யானை’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களின் தயாரிப்பாளர். அ.ம.மு.க சார்பில் திருநெல்வேலித் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

“கடந்த 2009-ம் ஆண்டு நெல்லைத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றேன்.  2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி சார்பில் திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு, எனக்கும் விஜயகாந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, அம்மா முன்னிலையில் அ.தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்தபோது, நான் சின்னம்மா அணியில் இருந்தேன். எடப்பாடியை முதல்வராக ஆக்கிய பின்னால் கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது எனக்கு  அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளர் பதவி கொடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க