சிரிக்காமல் படிக்கவும்! | Powerstar Srinivasan Election campaign in South Chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

சிரிக்காமல் படிக்கவும்!

சனா

‘இந்தியக் குடியரசுக் கட்சி (அ)’ சார்பாக, தென்சென்னைத் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடு கிறார், பவர் ஸ்டார் சீனிவாசன்.

“இரண்டு வருடமா இந்தக் கட்சியில இருக்கேன். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிச்சதும், கட்சியின் சார்பாகத் தென் சென்னையில் என்னைப் போட்டியிடச் சொல்லிக் கேட்டாங்க, அதனாலதான் நான் போட்டியிடுறேன். மக்கள் மத்தியில் எனக்குப் பெரிய பப்ளிசிட்டி இருக்குன்னு தலைமைக்குத் தெரியும். முக்கியமா, எனக்கு ரசிகர்கள் அதிகம். அதனால, இந்தத் தேர்தலில் எனக்கு வெற்றி கிடைக்கும். கட்சியிலும் நல்ல பெயர் இருக்கு” என்கிறார், பவர் ஸ்டார்.