“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!” | ADMK Minister Jayakumar interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

அ.தி.மு.க-வைப் பற்றி, அதன் ஆட்சியைப் பற்றி, தலைவர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அதற்கு உடனடி பதில் வருவது ஒருவரிடமிருந்துதான். அவர்தான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். கூட்டணிக் கட்சிக்காகவும், தென்சென்னைத் தொகுதியில் தன் மகனுக்காகவும் பரபரப்பாகப் பரப்புரை செய்துகொண்டிருந்தவரைச் சில கேள்விகளோடு சந்தித்தேன்...

‘`ஜெயலலிதா இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அ.தி.மு.க-வின் நீண்ட காலத் தொண்டனாக உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?’’

‘`அம்மாஇல்லாத தேர்தலை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால், தனக்குப் பின்னும் இந்தக் கழகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்க வேண்டும் என்பதே அம்மாவின் கனவு. அவர் மறைந்துவிட்டதாக நாங்கள் நினைக்க வில்லை. இப்போதும் அவர்தான் எங்களை வழிநடத்துகிறார். அந்த நம்பிக்கையில்தான் தேர்தலைச் சந்திக்கிறோம். இப்போது நடப்பதும் அம்மாவின் ஆட்சிதான்.’’