இறையுதிர் காடு - 19 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

இறையுதிர் காடு - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று   அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் அவரோடு சேர்ந்து தங்களையும் உபாசிக்கச் சொன்ன போகரை அஞ்சுகனும் புலிப்பாணியும் மகிழ்ச்சியுடனும் விம்மிதத்துடனும் பார்த்தனர். அந்த வேளையில் அஞ்சுகனுக்குள் ஒரு கேள்வியும் எழும்பியது.

``குருபிரானே!’’

``என்ன அஞ்சுகா?’’

``இந்த மனோன்மணித் தாயை தாங்கள் நம் கொட்டாரத்தில் வைத்து வழிபடாமல், இப்படித் தனித்த ஒரு மலையுச்சியில் வைத்து தியானித்திட பிரத்யேகக் காரணம் ஏதுமுண்டா?’’

``உண்டு. ஒரு காரணமல்ல... பல காரணங்களுண்டு!’’

``நாங்கள் அவற்றை அறியலாமா?’’