படுகொலைகளின் நூற்றாண்டு! | 100 years of Jallianwala Bagh massacre - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

படுகொலைகளின் நூற்றாண்டு!

மிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன் வாலா பாக்கில் அமைதியான முறையில் போராடக் குழுமியிருந்தவர்களின் மீது ஜெனரல் டயர் ஒரு துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறார். எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல், கலைந்து செல்லுவதற்கான அறிவிப்பைக்கூடச் செய்யாமல், தன் படைவீரர்களை மக்கள்மீது சுடச் சொல்கிறார். பத்து நிமிடங்களில் சுட்டுத் தீர்க்கப்பட்ட 1650 தோட்டாக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுகுவித்தது. ஏப்ரல் 13, 1919 அன்று மாலை 5.45-க்குத் துப்பாக்கிச்சூடு முடிந்தபோதும் அங்குள்ள கிணற்றுக்குள் தற்காப்பிற்காகக் குதித்தவர்கள், துப்பாக்கிக் காயங்களுடன் உள்ளே விழுந்தவர்கள் என அந்தப் பூங்கா வெளியெங்கும் மரணத்தின் ஓலம்.