கேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule | Game Changers: Smule - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

2013. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான தேர்வு நடந்துகொண்டிருந்தது. 50 வயதை நெருங்கும் பெரியவர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் கேள்வி கேட்ட ஆசிரியர்  “இந்த வயசுல இசையில பிஹெச்.டி வாங்கணும்னு ஏன் தோணுச்சு?” என்றார்.

அந்த `இளம் மாணவர்’ சொன்ன பதில் “சிம்பிள். எனக்கு இசை பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக்க ஆசை. அதான்!”

முனைவர்  பட்டம் வாங்குவது எளிதான காரியமல்ல. அதற்குப் பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன் மேல் தீராத காதல் இருக்க வேண்டும். 4 வயதிலிருந்தே பியானோ வாசிக்கத் தெரிந்த அந்த மாணவருக்கு அவை இருந்தன. அதனால்தான் அந்த வயதிலும் நல்ல மதிப்பெண்ணுடன் முனைவர் பட்டம் பெற்றார். அவர் பெயர் ஜெஃப்ரி கிறிஸ்டோபர் ஸ்மித் (Jeffrey Christopher Smith). ஸ்மூல் (Smule) நிறுவனத்தை நண்பர் வாங் என்பவருடன் சேர்ந்து 2008-ம் ஆண்டு நிறுவியவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க