“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்!” | Interview With director Cheran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்!”

“சிவாஜி என்ற மகா கலைஞன் மூலமாதான் சினிமா எனக்கு அறிமுகம். அவர் படங்களும், அவருடைய நடிப்பும் எனக்குள்ளே ஏற்படுத்திய கெமிக்கல் ரியாக்‌ஷன்தான், நடிகன் ஆகணும்ங்கிற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனா, அதுக்கான முயற்சிகளை எடுக்கிறப்போதான், நடிகன் ஆகுறதுக்கான எந்த சாத்தியக்கூறும் எனக்கு இல்லைன்னு புரிஞ்சது. நான் அழகா இல்லை; உயரமா இல்லை; எனக்கு டான்ஸ் வராது; ஃபைட் பண்ணப் பிடிக்காது... இப்படி ஒரு நடிகனுக்கு அப்போ உருவாக்கி வைக்கப்பட்டிருந்த எந்தக் கட்டமைப்பும் என்கிட்ட இல்லை. ஆனா, சினிமா எனக்குப் பிடிக்கும்; சினிமாவுல ஒரு பிரபலமா இருக்கணும். அதுக்காக என்னை நானே சுய மதிப்பீடுக்கு உட்படுத்திக்கும்போதுதான், எனக்குள்ள இருந்த இயக்குநர் சேரன் வெளியே வந்தார்.” - 22 ஆண்டுக்காலப் பயணத்தை வார்த்தைகளில் சுருக்கித் தருகிறார், சேரன். படைப்புகளில் உணர்வுகளை உருக்கிப் பிரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘திருமணம்’ மூலம் திரும்பியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க