ஓவியம்: செந்தில்
குறைந்துபோகும் குழந்தைத்தனங்கள்...
பள்ளி ஞாபகத்திலேயே
யார்வீடு சென்றாலும்
‘மே ஐ கம் இன்’ என்றே
உள் நுழைகிறாள்
ஒவ்வொரு நாளும்
அலைபேசியில்
வேண்டிய நொறுக்குத்தீனிகளை
சார்ட்
வெட்டி ஒட்டும்
படங்களுக்குப்பிறகே
பட்டியலிடுகிறாள்
வீடு திரும்புகையில்
திடீரெனப் பொழியும்
மிகவும் பிடித்தமான மழையில்
புத்தகங்களுக்காய்
நனையத் தயங்குகிறாள்
கொஞ்ச நேரம்
விளையாடச் சொல்லுமளவுக்கு
வீட்டுப்பாடம் செய்கிறாள்
பள்ளியில் சேர்த்த
நாள்முதலாய்
கொஞ்ச கொஞ்சமாய்
குழந்தைத்தனங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கிறாள்.
- சாமி கிரிஷ்