பாட்டி வழியில் பிரியங்கா... | Priyanka Gandhi enters politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

பாட்டி வழியில் பிரியங்கா...

பா.ஜ.க.வை எதிர்கொள்வாரா?

1991 மே 22. அதிகாலை நேரம்.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையைச் சுற்றிலும் காக்கிகள் மனித சுவர் எழுப்பியிருந்தார்கள். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ராஜீவ் காந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனை மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் பணிகள் முடிந்து, ரத்த உறவுகளில் ஒருவர் உடலை அடையாளம் காட்டிக் கையெழுத்து போடும் சம்பிரதாயங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ராஜீவ் உடலைப் பார்க்க ரத்த உறவுகளான சோனியாவும் பிரியங்காவும் அழைக்கப்பட்டார்கள். ‘`நீங்க இருங்கம்மா... முதலில் நான் பார்த்துவிட்டு வருகிறேன்’’ எனச் சோனியாவிடம் சொல்லிவிட்டு, அப்பாவின் உடலைப் பார்க்க மார்ச்சுவரிக்குள் நுழைந்தார் பிரியங்கா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க