இறையுதிர் காடு - 9 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

இறையுதிர் காடு - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று அந்த வேலன் தண்டபாணியாக நிற்க உண்மைக் காரணம் என்ன தெரியுமா என்று கேட்ட போகர், அதற்கான காரணத்தைக் கூறத் தொடங்கினார். அப்படிக் கூறுமுன் அந்த வேம்பின் நிழலில் இருந்தபடியே தலையைத் திருப்பி சற்று அண்ணாந்து, வரும் நாளில் கோடானு கோடிப் பேர் வந்து செல்லவிருக்கின்ற அந்த மலை உச்சியை ஒரு பார்வை பார்த்தார். அப்படிப் பார்த்த அவர் முகத்தில் ஒரு வகை பக்திப் பரவசம்!

உதடுகளும் ‘முருகா’ என்று உளமார முணுமுணுத்தது.

பிறகே பேசத் தொடங்கினார்.