சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம் | Sarvam Thaala mayam - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்

சைக்கு பேதங்கள் இல்லை என்பது ‘சர்வம் தாளமயம்’ சொல்லும் சங்கதி.

மிருதங்கம் செய்யும்  தஞ்சை ஜான்சனின் ஒரே மகன் பீட்டர் ஜான்சன். பீட்டருக்கு நண்பர்களும் விஜய் சினிமாவும்தான் ஹார்ட் பீட். சினிமாவின் வெளிச்சம் விரும்பாத, கர்னாடக இசைக் கச்சேரிகளில் மட்டும் மிருதங்க வித்தை காட்டும் வேம்பு ஐயரிடம் சீடனாகச் சேர பீட்டர் ஜான்சன் ஆர்வம்கொள்ள, அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யர்  மணி.  பழி ஒரு பக்கமும், சாதிய அடையாளம் மறுபக்கமும் பீட்டரை அழுத்த, எப்படி நீரில் அழுத்திய பந்தாய் பீறிட்டு எழுகிறான்... சாதிக்கிறான் என்பதே கதை!