நர்சிம் கவிதைகள் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

நர்சிம் கவிதைகள்

சிறுகச் சிறுகத் தவிர்க்கப்பட்டு
இதோ
இப்பெருந்தனிமை

மொத்த அறைக்கும்
போதுமானதாயிருக்கிறது
இந்த ஒற்றை நாற்காலி.

பகிர்தல் ஏதுமற்ற
தனிப்பெரும் சாம்ராஜ்ஜியம் எனது.
ஆம்
தவிர்த்தல்களைத் தவிர்த்தலென்பதோர்
பெருங்கலை.
ஒரு சிட்டிகை உப்பும்
தேவையான அளவு மிளகும்
தனிமையின் மீது தூவி
விண்டு வில்லைகளை
உண்டு செரித்தல்
அதிலோர் வகை

இந்தக் கவிதையின்
இறுதிப்புள்ளி
ஒரு
கருஞ்சிறு குறுமிளகு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க