இறையுதிர் காடு - 10 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

இறையுதிர் காடு - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று போகர் அளித்த ஆச்சர்யம், சீடர்களிடம் கேள்விகளை விளைவித்தது.

``குருபிரானே, இப்படி ஒருவரால் நடந்துகொள்ள முடியுமா? சிவபெருமான், நம்மையெல்லாம் படைத்தவர். உடம்பெங்கும் சொறியும் சிரங்குமானவனோ பரிதாபத்துக்குரியவன். எப்படி இருவரையும் சமமாக ஒரு மனதால் எண்ண முடியும்?’’ என்று கேட்டான் ஒரு சீடன்.

சிரித்தார் போகர். சிரிப்பு, ஒரு மர்மமொழி. எப்போதும் ஒரு ஞானியின் சிரிப்புக்கு இன்னொரு ஞானியாலேயே சரியான பொருள் கூற முடியும். அது ஓர் அனிச்சைச் செயலும்கூட. எனவே, போகர் சிரிப்பின் பொருளை அங்கே யாரும் உணரவில்லை. உணரும் வயதும் அவர்களுக்கில்லை. போகரே தொடர்ந்தார்.