காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு... | Love Changes with time - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...

‘இதயம்’ முரளி காதலெல்லாம் இன்றைக்குச் சுத்த ஹம்பக் ஆகிவிட்டது. பழைய படங்களில் ‘காதல்ங்கிறது...’ என்று ஹீரோ டயலாக் பேச ஆரம்பித்தால் பகபகவெனச் சிரித்துவிடுகிறது இன்றைய இணைய தலைமுறை. தாடி, தண்ணி, இரவெல்லாம் தலையணையைக் கண்ணீரில் நனைப்பது என்றெல்லாம் லவ் ஃபெயிலியரை கண்ணீரும் கம்பலையுமாகக் கடப்பதில்லை இவர்கள். சொல்லப்போனால், `பிரேக் அப்’புக்குப் பிறகு ஒரு ரோடு ட்ரிப் அடித்து, தங்களுக்குத் தாங்களே ரெஃப்ரஷ் பட்டன் தட்டிக்கொள்கிறார்கள். காதல் மனதிலிருந்து மூளைக்கு இடம் பெயர்ந்துவிட்டதா? உணர்வுகள், இன்டலெக்சுவல் பரிணாமம் அடைந்துவிட்டனவா? இருபதுகளில் இருக்கிறவர்களிடமே கேட்டோம். ‘`நோ ஊர், பேர் என்றால் வீ ஆர் ரெடி’’ என்றவர்கள், மில்லினியல் காதல் பற்றி இதயம் திறந்தார்கள்.