“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!” | Interview with Actress Vijayashanti - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!”

ஹைதராபாத்தில் வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதி பஞ்ஜாரா ஹில்ஸ். அமைதியும் ரம்மியமும் நிறைந்த அந்த ஏரியாவில்தான் நடிகை விஜயசாந்தியின் வீடு. காங்கிரஸ் கட்சியின் பிரபலங்களில் ஒருவரான இவர், தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரசாரக் குழுத்தலைவர். இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ள வீட்டில், ஒரு சிசிடிவி கேமராகூட இல்லை. காரில் கட்சிக்கொடியும்கூட இல்லை. ஒரு  வி.ஐ.பி வீடு என்பதற்கான அடையாளங்களும் இல்லை. புன்னகையுடன் வரவேற்ற விஜயசாந்தி, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் வரை பேசியது எல்லாமே அவரது சண்டைக் காட்சிகளைப்போல அதிரிபுதிரி அதிரடிதான்.