இறையுதிர் காடு - 11 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

இறையுதிர் காடு - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று போகர், சனத்குமாரன் என்கிற தண்டபாணி குறித்து விரிவாகக் கூறத் தொடங்கினார்.

``சீடர்களே, நிறைய கேள்விகளை எழுப்பினீர்கள். அவற்றுக்கான பதிலைத்தான் நான் கூறப்போகிறேன். நான் இப்போது கூறப்போவது எனக்கு என் குரு கூறியது. நாம் இருக்கும் இந்தப் பொதினி எப்படி நிலக்கூறுகளால் சேர சோழ பாண்டிய மண்டலங்களுக்கு சம தூரத்தில் உள்ளதோ இதுபோலவே, அதே சமயம் வேறுபட்ட பல சிறப்புகள்கொண்ட ஒரு மலையகம் ஒன்று இங்கிருந்து தென்மேற்குத் திசையில் உள்ளது. `சதுரகிரி’ என்பது அதன் பெயர்.