2018 டாப் 10 பிரச்னைகள் - குறையாத சாதி ஆணவம்!

மதிவண்ணன் எழுத்தாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

க்தி இயக்கம் தமிழக அரசர்களின் ஆதரவைப் பெற்ற காலத்திலிருந்து சாதி சார்ந்த மதிப்பீடுகள், கற்பிதங்கள் ஆகியன மக்களிடம் நிலைபெறத் தொடங்கின. அன்றிலிருந்து மதம் சார்ந்த புனிதக் கடமைகளுள் ஒன்றாகவே திருமணம் என்பது தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது. சாதி ஆணவக்கொலைகள் இத்தகைய நம்பிக்கைகளின் துணையுடனேயே நடக்கின்றன எனலாம். இடைக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாதி ஆணவக்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாறு கொலையுண்டவர் கள் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றனர். சமூகத்தின் குற்றவுணர்வாலும், அச்சவுணர்வாலும் அதன் நடைமுறை வாழ்க்கையில் ஒருபகுதியாய் இச்சிறு தெய்வங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick