சோறு முக்கியம் பாஸ்! - 42

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொடர்

ன்னமழகி, பூங்கார், குள்ளங்கார், குருவிக்கார், கம்பஞ்சம்பா, பொம்மி, அனந்தனூர் சன்னம், பால்குடவாழை, இலுப்பைப்பூ சம்பா, நவரா... சங்க இலக்கியங்களில் உலவும் பழைமையான வார்த்தைகளைப் போலிருக்கும் இவையெல்லாம் என்ன? முப்பதாண்டுகளுக்கு முன்புவரை நம் கிராமத்து வயற்காடுகளில் புழங்கிய வார்த்தைகள்தாம். எல்லாம் நம் பாரம்பர்ய நெல் ரகங்கள். இவையெல்லாம் நம் கைவிட்டுப்போய்  பல ஆண்டுகளாகின்றன.  ஐ.ஆர் ரக வீரிய அரிசிகளைத்தான் இப்போது நாம் விளைவிக்கிறோம்... சாப்பிடுகிறோம்.

பாரம்பர்ய அரிசி ரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகொண்டதாக இருக்கும். கவுனி அரிசி சிவப்பு நிறத்திலிருக்கும். கருங்குருவை கறுப்பாக இருக்கும். குடவாழை சற்று செந்நிறத்தில் மோட்டாவாக இருக்கும். மாப்பிள்ளை சம்பா, ஆரஞ்சு நிறத்திலிருக்கும். தமிழகத்தின் சில பகுதிகளில் இந்தப் பாரம்பர்ய அரிசிகளைப் பயன்படுத்தும் உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், வழக்கமான வெண்மை அரிசிக்குப் பழகியவர்களை இந்தப் பாரம்பர்ய அரிசி ரகங்கள் ஈர்ப்பதில்லை.

சென்னை, ராமாவரம், கற்பகாம்பாள் நகர் முதல் தெருவில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை திருவிழாக்கூட்டம்போல இளைஞர்களால் திணறுகிறது இந்த உணவகம். பரிமாறுபவர்களும், சமைப்பவர்களும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick