சோறு முக்கியம் பாஸ்! - 44

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயற்கையே... இறைவன்

மிழக வட்டார உணவுகளில் பாண்டிய நாட்டு உணவு வித்தியாசமானது.  மஞ்சள், மல்லிப் பயன்பாடு அதிகமாக இருக்கும். அவற்றின் வாசனையே உணவைத்  தனித்தன்மையாக்கிவிடும்.  நுனி நாக்கைச் சிலிர்க்க வைக்கும் காரம் பாண்டிய நாட்டுக்கேயுரிய அடையாளம்.  பழைமை மாறாத சமையல் முறை இன்னும் மிஞ்சியிருப்பதும் அந்தப்பகுதியில்தான். இன்னும் ஆட்டுரலில் மாவாட்டுவதும், அம்மியில் மசாலா அரைப்பதும், திருகையில் பயறுகளை உடைப்பதும், உரலில் இஞ்சி பூண்டு இடிப்பதும் மதுரையில் மட்டும்தான் மிஞ்சியிருக்கின்றன.

குறிப்பாக அசைவ உணவுகள்... கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகு இணைவில் மதுரை மக்களின் கைவண்ணத்தில் மட்டுமே வரும் ‘நாட்டுச் சுவை’ கொண்டாடத்தக்கது. கடலுணவுகளாகட்டும், இறைச்சிகளாகட்டும், மதுரை வாசனை, ருசி என்பது தனிதான். மதுரையின் சாலையோர உணவகங்களில் கூட வயிற்றை வதைக்காத அசல் மதுரை உணவை ருசிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick