ஸ்ரீவள்ளி கவிதைகள் | sri valli Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

ஸ்ரீவள்ளி கவிதைகள்

ரோஜா 1

வ்வொரு ரோஜாவும்
மற்ற ரோஜாக்களோடு இருக்கும்போதும்
தனித்தனியாக இருக்கின்றன
ஒவ்வொரு ரோஜாவும்
காற்றில் சப்பணமிட்டு
முள்ளை ஏந்தி
உலகத்தை ஆள்கின்றன
உலகத்தைத் தம்மிடையே
பாகம்போட்டுக்கொள்ளாமல்
அதனால் சச்சரவில்லாமல்
அதனால்
ஒரு ரோஜாவின் வாசனைக்குள் நுழைந்து
இன்னொரு ரோஜாவின் வாசனை வழியாக
வெளியேறப் பார்ப்பது
நடக்காத காரியம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க