நான்காம் சுவர் - 21 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

நான்காம் சுவர் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

லக்குறிச்சியின் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய குப்பை லாரி, சிறிது தூரத்தில் சிறைக்காடு காலனியின் பாதையில் நுழைந்தது. மகோகனி மரத்தின் சிவப்பு மலர்கள், வழிநெடுக உதிர்ந்திருந்தன. லாரியிலிருந்து குப்பைக் குவியலின் சாறு, அந்தப் பாதையில் நெடுவாக்கில் ஒரு கோலத்தைப் போட்டபடியே சென்றது. குப்பை லாரியின் வாய்ப்பகுதியைப் பள்ளத்தாக்கில் சரியாக நிறுத்தி, ஓட்டுநர் ஒரு சுவிட்சை அழுத்தினார். ஹைட்ராலிக் ஆரம் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி, மொத்தமாகச் சாய்த்தது. ஏற்கெனவே மேட்டிலிருந்து கொட்டப்பட்ட கழிவுகள் காய்ந்து கெட்டியாகி அதுவும் ஒரு மலையெனக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க