இறையுதிர் காடு - 7 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

இறையுதிர் காடு - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று தாழப் பறந்து வந்த அந்த வல்லூறு, கையை விடைப்பாக நீட்டியபடி நின்றிருக்கும் அஞ்சுகனின் கரம்மேல் அவனை ஓர் எஜமானனைப்போல் கருதி அமர்ந்தது. மானுட அச்சம் அதனிடம் துளியுமில்லை. அந்தக் காட்சியைக் கண்ட சீடர்கள் அத்தனை பேருமே, வியப்பில் புருவங்களை உயர்த்தினர்.

போகர், மெள்ள அதன் அருகே சென்று அதன் தலையையும் சிறகுகளையும் வருடி, அன்புகாட்டத் தொடங்கினார். அதுவும் குழைந்துகொடுத்தது. குறுமணி போன்ற கண்களை ரப்பைகொண்டு மூடித் திறந்து `நான் நெகிழ்கிறேன்’ என்றது.

அஞ்சுகன் அதை ரசித்தான்.