நடுக்கடலில் சில சாகசங்கள்! | People visit Coast Guard ships Sagar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

நடுக்கடலில் சில சாகசங்கள்!

ந்திய கடலோரக் காவற்படை முதல் முறையாகச் செயல்பாட்டிற்கு வந்த நாள் பிப்ரவரி 1.  அதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களை கப்பலில் அழைத்துச் சென்று அவர்களின் பணியை பற்றி செயல்முறை விளக்கம் கொடுப்பது வழக்கம். இதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ‘சாகர்’ கப்பலில் நம் விகடன் குழுவும் ஒரு ‘ரைடு’ சென்றோம். துறைமுகத்தை அடைந்த போது, பெரிய துப்பாக்கிகளை ஏந்தியபடி கப்பல்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. கரையில் நின்று பார்க்கும்போது கப்பல் சின்னதாக இருக்கிறதே எனத் தோன்றியது. ஆனால், கப்பலில் ஏறிப் பார்த்தால் ஏராளமானோர் உட்காரும் அளவு இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் சென்ற சாகர் கப்பலில் மட்டும் அன்று 15 அதிகாரிகளும், 105 மாலுமிகளும் இருந்தார்கள்.