வேகம் + விவேகம் = ஜெகன் | Interview With Jagan Wins National Motorcycle Racing - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

வேகம் + விவேகம் = ஜெகன்

ஜார்ஜ் லொரன்ஸோ, மும்முறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பானிஷ் ரேஸர். பார்சிலோனாவில் தான் சொந்தமாக வாங்கிய பெரிய மாளிகை வீட்டில் அந்த மூன்று கோப்பைகளுடன்தான் தூங்குவாராம். ஜெகனைப் பார்க்கும்போதெல்லாம் லொரன்ஸோவின் ஞாபகம்தான் வரும். சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜெகன் நேஷனல் சாம்பியன்’ என்று அவரது எண்ணை என் மொபைலில் சேமித்திருந்தேன். இடைப்பட்ட காலத்தில் எண் மாறியிருந்தாலும் `சாம்பியன்’ என்கிற பட்டத்தில் மாற்றமில்லை.