இறையுதிர் காடு - 8 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

இறையுதிர் காடு - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று வேலுக்கான விளக்கத்தைக் கூறும் முன், போகர் அண்ணாந்து வானத்தை ஒருமுறை பார்த்தார். கதிரவன் எண்பதாம் பாகையில் இருந்தான். இன்னும் பத்து கடந்தால் உச்சம். கீழே அவர் நிழலும் சுருங்கி இரு கால்களுக்குக் கீழே அடங்கிவிடும்! உச்சியில், அதாவது நம் சிரத்தில் ஒளி உண்டாகும்போது இருளற்ற ஒரு நிலைக்கு மனிதன் ஆளாகிவிடுவதையே ஒவ்வொரு நண்பகல் உச்சமும் உணர்த்துகிறது. அதை எண்ணியவர், சீடர்களை உண்டு களிக்கக் கட்டளையிடலானார்.

``அருமைச் சீடப் பிள்ளைகளே!

வேலுக்கான விளக்கம் என்பது உங்கள் உடல் சார்ந்தது. உடல் சார்ந்த ஒன்றைச் சொல்லும்போது உங்களில் எவருக்கும் பசியுணர்வு இருத்தல் கூடாது. எனவே, உங்கள் பேருணவை முடித்து விட்டு, பிற்பகலின் நான்காம் நாழிகைமுடிவில் வேம்பன் மடியில் கூடுங்கள் (வேப்பமர நிழல் விழும் பாகம்) நாம் மீண்டும் சந்திப்போம்`` என்றார்.