கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony | Game changers - BharatMatrimony - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்தியாவில் திருமணங்கள் மிக முக்கியமானவை. மற்ற நாடுகளைவிட நாம் திருமணங் களுக்குச் செய்யும் செலவுகள் மிக அதிகம். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி ரூபாய் திருமணங்களுக்காக மட்டுமே நாம் செலவழிக்கிறோம். திருமணச் செலவுகள் என்ற பட்டியலில் முதலில் வருவது வரன் பார்க்கும் செலவுகள்தாம். பக்கத்து வீட்டுக்காரரிடம் தொடங்கி, தெரிந்த அனைவரிடமும் “பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். நல்ல வரனா தெரிஞ்சா சொல்லுங்க. ஜாதகம் செட் ஆனா முடிச்சிடலாம்” என்பதில் தொடங்கும் இந்த வேலை இப்போது ட்விட்டரில் “Looking for a bride for my cousin. 25, 172 cms, Doctor, preferably from Chennai” எனக் கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறது. இன்று இந்தியத் திருமணங்களில் கணிசமான திருமணங்களை நிச்சயிப்பது மேட்ரிமோனி இணைய தளங்கள்தாம். அவற்றில் முதன்மையானது matrimony.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க