இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3 | Health series for above the Forties - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/05/2019)

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மூணு மணி நேரத்துக்கு முன்னால சுட்டு, காய்ஞ்சுபோன தோசையும், தாளிக்காத தேங்காய்த் துவையலும்போல,  வாழ்க்கை வறவறன்னு இருக்கு. மீசை மட்டும் வெளுத்துச்சா... இல்லை சாயமே வெளுத்துருச்சா...’ என நாற்பதுகளின் அங்கலாய்ப்பு இல்லாத பெண்கள் நகர்ப்புறத்தில் குறைவு. ‘ஏன் குளுகுளுன்னு மெட்ரோலதான் வரணுமாக்கும்? எவ்வளவு காஸ்ட்லி... நேத்துவரை சாதாரண எலக்ட்ரிக் டிரெயின்லதானே வந்தே...  இப்போ என்னாத்துக்கு மெட்ரோ...” என்ற கேள்வியில் வெறுத்துப்போன பெண்கள் சென்னையில் கணிசம்பேர் உண்டு. கொளுத்தும் வெயிலில், நம்பிக்கைகளையும் நான்குமாதக் குழந்தைகளையும் சுமந்துகொண்டு, பேருந்து அட்டவணை, குட்டி டைரி, வெட்டிவைத்த வெள்ளரி, ஒரு ரூபாய் சைனா பேனா என எளிய பொருள்களை நசுங்கி நைந்து விற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு சிசேரியனில் தொங்கிப்போன தொப்பையைப் பற்றிக் கவலைகள் இல்லை. ஆனால், சமீபகாலமாகத் தகதகவென எரியும் பாத எரிச்சல் பற்றியும், மாதவிடாய்க்கு முன்னதாக மட்டும் கனக்கும் மார்பு, இப்போது அடிக்கடி கனத்து வலிப்பது பற்றியும் நிச்சயமாகக் கவலை உண்டு. ஒருவேளை புற்றாய் இருக்குமோ என்ற எண்ணம் அவர்களின் இயல்பைக் குலைக்கிறது. ஆனால், வீட்டுக்குப் போனதும் பொரியலுக்கு பீன்ஸை அளவாய் நறுக்குவதிலும், மகனுக்கு முறுகலாய்த் தோசை சுடுவதிலும் அந்த எரிச்சலும் கனத்தலும் மறந்துபோகும்.