கடிதங்கள்: ஆல்வேஸ் பெஸ்ட்! | Readers Feedback letters - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

கடிதங்கள்: ஆல்வேஸ் பெஸ்ட்!

றுதி எஜமானர்களான மக்களுக்கு நன்மை செய்வதையே இலக்காக வைத்துக்கொள்ளச் சொன்ன ரிசல்ட் ஸ்பெஷல் தலையங்கம் சூப்பர்.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

கவர் ஸ்டோரி, மோடியின் கெத்தை மட்டுமல்ல, விகடனின் கெத்தையும் ஒருசேரக் காட்டியது.
- விஜயலட்சுமி சிவசங்கரன், வளசரவாக்கம்.

இந்த வார சர்வர் சுந்தரம் ‘ரீமேக்’ அட்டகாசம். நிஜமாகவே எடுக்கலாமே என்று ஏங்க வைத்தது.
- ஆர்.சியாமளா, மந்தவெளி.

கே.ராஜன், கே.ஆர்.பிரபு பேட்டி நெகிழ்ச்சி.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

இறையுதிர்காடு இந்த வாரம் ஓவியத்தில் அசத்திவிட்டார் ஸ்யாம்.
- ராஜா, மாடம்பாக்கம்.

இந்த வார இன்பாக்ஸ் கலர்ஃபுல்!
- ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்.

வாசகர் மேடையில் வாசகர்கள் புகுந்துவிளையாட ஆரம்பிச்சுட்டாங்களே!
- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

ஹலீம் கட்டுரை, சோறு முக்கியம் பாஸ் தொடருக்கான ஸ்பெஷல் சைடிஷ் போல கமகம மணத்துடன் கலக்கலாக இருந்தது!
- அ.யாழினி பர்வதம், சென்னை 78

மீட்கப்பட்ட கொத்தடிமைகள் பற்றிய கட்டுரை பல கேள்விகளை மனதுக்குள் எழுப்பியது.
- ராம், சோலையூர்.

சொர்ணலதாவின் அண்ணன் மகள் ரீமா அறிமுகப்பேட்டிக்கு நன்றி. திறமையாளர்களை முதலிலிருந்தே அடையாளம் காண்பதில் ஆனந்தவிகடன் ஆல்வேஸ் பெஸ்ட்தான்!
- ராபா, காஞ்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க