ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்... | World Cup Cricket - First Week interesting incidents - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

2019 கிரிக்கெட் உலகக் கோப்பை ஜோராக ஆரம்பித்திருக்கிறது. 10 அணிகளும் கோப்பைக்காக மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டன. முதல் வார சுவாரஸ்யங்கள் இங்கே...

உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன், 10 அணிகளின் கேப்டன்களும் இங்கிலாந்து ராணியையும், இளவரசர் ஹேரியையும் சந்தித்தனர். 9 கேப்டன்களும் கோட் சூட்டில் இருக்க, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது மட்டும் நீண்ட குர்தா அணிந்திருந்தார். “எங்கள் நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக அந்த உடையை அணிந்திருந்தேன். மற்ற கேப்டன்கள் சூட் அணிந்திருக்கையில், நான் அந்த உடையில் இருந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று எமோஷனலாகக் கூறினார் சர்ஃபராஸ்.