கைகோப்போம்... தாகம் தீர்ப்போம்! | Social Servie: Water distribution - Ananda vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

கைகோப்போம்... தாகம் தீர்ப்போம்!

லகில் முக்கால் பாகம் நீர் இருந்தும், அருந்த நீர் இல்லாமல் மூக்கால் அழும் நிலையில் இருக்கிறோம். விவசாய நிலங்களையும், ஏரிகளையும் விளைநிலங்களாக மாற்றிவிட்டு, தாகம் தீர்க்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். இப்படி, தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, கோவை, மதுரை மாதிரியான மெட்ரோ நகரங்களும் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றன.