“ஊழல்வாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது!” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் | Exclusive interview with Odisha Chief Minister Naveen Patnaik - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

“ஊழல்வாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது!” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

விகடன் எக்ஸ்க்ளூசிவ்

“அப்னே மானே குஷி தோ?’’

தனக்காகப் பல மணி நேரம் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி இதுதான்... ‘‘நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’’ என்பதுதான் அதன் அர்த்தம்.

அவர்கள் “அமே குஷி’’ (நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்) என்று உற்சாகமாகக் கூறுகிறார்கள். அந்த கோஷத்திலேயே அவர்களின் சந்தோஷம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கிறது. அவர்களுக்கு அவரும் பதில் தருகிறார்... ``மு பி குஷி !’’ (அப்படியானால், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்). அதற்குப் பின் ஓரிரு வார்த்தைகளோடு விடைபெறுகிறார். பெருந்திரள் பெருமகிழ்வோடு வீடு திரும்புகிறது.

மக்களை மகிழ்ச்சிப்படுத்தி அதில் மகிழ்பவனே உண்மைத்தலைவன். அப்படியொரு தலைவனாக ஒடிசா மக்களால் போற்றப்படுகிறார் நவீன் பட்நாயக். ‘குஷி தோ?’ என்ற அந்த ஒற்றைக்கேள்வியே, ஒடிசா தேர்தல் பிரசாரத்தில் நவீன் பட்நாயக் பயன்படுத்திய ஒரே ஆயுதம். அதில்தான் அவரின் எதிரிகள் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறார்கள். நடந்து முடிந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் 147 தொகுதிகளில் 112 தொகுதிகளிலும், நாடாளுமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் 12 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராகியிருக்கிறார் நவீன் பட்நாயக்.