இன்னா நாற்பது இனியவை நாற்பது | Health series for above the Forties - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டந்த ஐந்தாறு வருடங்களில், நம் மக்களிடையே உருவாகியிருக்கும் ஒரு நல்ல விஷயம் நடைப்பயிற்சிப் பழக்கம். நகர்ப்புறப் பூங்காக்கள், காலை நேரத்தில் நாற்பதுக்கு மேற்பட்டவர்களால் நிரம்பிவழிகின்றன. போதாக்குறைக்கு, பூங்காக்களின் வாசலில் வகைவகையான கீரைகளும், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ என வழக்கொழிந்த மருத்துவ மலர்களும் புதிதாய்க் குடியேறியுள்ளன. அறுகம்புல்லிலிருந்து பருத்திப்பால்வரை பல உற்சாக பானங்களாக உலா வருகின்றன. கூடவே, ‘எக்கா இதையும் இங்க வச்சு வித்துக்கட்டா?’ என மருந்து போடாத பப்பாளியையும் வெண்டைக்காயையும் அள்ளிக்கொண்டுவந்து கடைபோடும் நம் கிராமத்துச் சகோதரிகளையும் பார்க்க முடிகிறது.