மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்! | ADMK alliance with BJP and PMK for Parliament Election - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

2016சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் ஆறு அரசியல் அணிகள் களத்தில் நின்றன. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க, மக்கள்நலக்கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர். மொத்தம் ஐந்து ‘முதல்வர் வேட்பாளர்கள்’ நின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், சீமான் மற்றும் ‘அன்புமணி ஆகிய நான்.’ தி.மு.க, அ.தி.மு.க-வை எதிர்த்த நான்கு அணிகளுமே ‘நாங்கள்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்றன. ஆனால், தமிழக மக்கள் இவற்றில் எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. அ.தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. தி.மு.க-வும் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சியானது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான். மக்கள்நலக்கூட்டணி இல்லாமலிருந்தால் தி.மு.க வென்றிருக்கும் வாய்ப்புகள் அதிகம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close