“பா.ஜ.க-மீது இருப்பது வெறுப்பல்ல... அச்சம்!” | Interview with Kollywood director Karu Pazhaniappan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

“பா.ஜ.க-மீது இருப்பது வெறுப்பல்ல... அச்சம்!”

“ரஜினி, வந்தா ராஜாவாதான் வருவேன் என்பதுபோல், ‘நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம், சட்டமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ எனக் கூறிவிட்டார். கமலோ, மத்திய அரசையோ காங்கிரஸையோ விமர்சிக்காமல், மாநிலக் கட்சிகளை மட்டும் விமர்சித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார். அதனாலேயே அவர்மீது சந்தேகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை...”

“யாராவது என்னிடம், ‘பல வேலைகளைச் செய்ய எப்படி நேரத்தைத் திட்டமிடுகிறீர்கள்’ எனக் கேட்டால், அதற்குக் கருணாநிதியைத்தான் கைகாட்டுவேன். நம் கண் முன்னே ஒருவர் 70 ஆண்டுகளுக்கும் மேல் நாள்தோறும் காலை முதல் நள்ளிரவு வரை அரசியல், இலக்கியம், பத்திரிகை என ஓய்வில்லாமல் உழைத்தார். அவரைப் பார்த்தால் இப்படி ஒரு கேள்வியே யாருக்கும் தோன்றாது...”

“இந்தியாவில், எந்தக் கட்சியும் தேசியக் கட்சி இல்லை. எல்லாமே பிராந்தியக் கட்சிகள்தாம். காஷ்மீர் முதல் தமிழகம்வரை  அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெறும் திறன் உள்ள கட்சி என ஒன்றைக் காட்டுங்கள். ஒரு பகுதியில் உங்கள் கட்சி ஹீரோ என்றால், இன்னொரு மாநிலத்தில் காமெடியன்தான். அப்படி இருக்கும் நிலையில், இங்கு எதுவுமே தேசியக் கட்சி இல்லை...”

- எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை தனக்கே உண்டான பகடியுடன்  விளக்குகிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பிறகு உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர், அரசியல் விமர்சகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தடங்களைப் பதித்தவர் பழனியப்பன். அவருடனான சந்திப்பில் இருந்து...

[X] Close

[X] Close