“அந்த வீடியோவை அழிக்கணும்!” | Interview with Vijay TV Anchor Priyanka - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

“அந்த வீடியோவை அழிக்கணும்!”

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, பிரியங்கா. ஊடகத்துறையில் பத்து வருடத்தைக் கடந்து பதினொன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஒவ்வொரு `குழந்தைகள் நிகழ்ச்சி’யிலும், தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறார். அவரிடம் பேசும்போதும் அதே பரவசம் நமக்குள்ளும்!

‘`உங்களுடைய முதல் ரியாலிட்டி ஷோ அனுபவம் எப்படி இருந்தது?”

‘`நான் ரேடியோவில் ஆர்.ஜே-வா ஒரு ஷோ பண்ணினேன். அப்பவும் இப்படித்தான் வாயாடியா இருப்பேன். ‘இந்த வாய்தான் உனக்கு நல்ல வாய்ப்பை வாங்கித் தரும். நீ எங்கயோ போகப்போறே’னு சொன்னார், ஆர்.ஜே-வாக உடனிருந்த மா.கா.பா. அப்போல்லாம் ‘எனக்கா... அட நீ வேற’ன்னு கலாய்ச்சு விட்டுடுவேன். ஆனா, அவர் சொன்ன வார்த்தைகள் சில வருடங்கள் கழித்துப் பலித்தது. முதன்முதலாக மேடை ஏறுவதற்கு முன்னாடி, நடந்து வர்ற பாதையில கேப் இருந்ததைக் கவனிக்காம, அதில் காலை வெச்சுட்டேன். ஆணி கால்ல ஏறி, வீங்கி... முதல் நாளே எனக்கு சோகமான நாளாகிடுச்சி. விழுந்தாலும் தளராமல் எழுந்து நின்னுட்டோம்ல!’’

‘`எப்படி இவ்வளவு சரளமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டீர்கள்?’’

‘`11-ஆம் வகுப்பை முடிக்கிறவரை அவ்வளவா எனக்குத் தமிழ் தெரியாது. உடன் இருக்கும் நண்பர்கள் மூலமா தமிழைக் கத்துக்கிட்டேன். இப்போ சென்னைத் தமிழிலும் இறங்கி அடிக்கிறேன் பாக்குறீங்கல்ல... ஆனா, என் அம்மாவும் தம்பியும் ஷோ பார்த்துட்டு, எல்லோரும் சிரிச்சா, ‘எதோ ஜோக் அடிக்கிறாங்க போல’ன்னு அவங்களும் சிரிப்பாங்க. என் மாமியார், மாமனார் எல்லாம் செம்மயா என்ஜாய் பண்ணுவாங்க. ‘ஏன் திரும்ப இதே கம்மல் போட்டிருக்க, டிரெஸ் போட்டிருக்க’ன்னு என் மாமியார் நோட் பண்ணிச் சொல்வாங்க.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close