“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’ | Tamil Nadu Mother and daughter gets Government job together - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’

“எனக்கு 47 வயசு, என் மகளுக்கு 27 வயசு. போன வருஷம் பிப்ரவரி மாசம் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சோம்; பரீட்சை எழுதினோம். இப்போ ஜோடியா பாஸாகிட்டோம். எனக்குப் பொது சுகாதார மருந்தகத் துறையிலும், என் பொண்ணு தேன்மொழிக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் வேலை கிடைச்சிருக்கு’’ - தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சாந்தலெட்சுமியின் குரலில் மகிழ்வும் நெகிழ்வும். கணவரின் இழப்பு, மூன்று பெண் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மகளுக்குண்டான தன் கடமைகள் என்று அனைத்தையும் கடந்து சாந்தலெட்சுமி பெற்றிருக்கும் வெற்றி இது.

“எங்க வீட்ல மூணு பெண் பிள்ளைங்க. நான்தான் மூத்தவ’’ என்ற தேன்மொழி,  ‘`என் முதல் தங்கச்சி கல்லூரியில படிக்கிறா. ரெண்டாவது தங்கச்சிக்கு மூளைவளர்ச்சி இல்லை. நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு, `D.T.Ed’ படிச்சேன்; தொலைதூரக் கல்வியில் `B.Lit’ முடிச்சேன். இன்னொரு பக்கம், எங்கம்மாவும் என் கூட சேர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. பத்தாவதுவரை படிச்சிருந்த எங்கம்மா, டுட்டோரியலுக்குப் போய் ப்ளஸ் டூ முடிச்சு, பி.ஏ.தமிழ், பி.எட் முடிச்சாங்க. 2014-ம் வருஷம் எங்கப்பா இறந்தபிறகு, எங்கம்மாவுக்கான பொறுப்புகளும் சுமைகளும் கூட, எல்லாரும் தாத்தா - பாட்டி வீட்டுக்கு வந்துட்டோம்.

[X] Close

[X] Close