இது சங்கீத சங்கமம்! | Music lovers pays tribute to Sri Mandolin Srinivas - Annada Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

இது சங்கீத சங்கமம்!

மாண்டலின் என்ற இசை வாத்தியத்தின் பெயரைச் சொன்னாலே அடுத்ததாய் நாம் உச்சரிக்கும் பெயர்;  வயது இரட்டை இலக்கத்தைத் தொடும் முன்பே முதல் கச்சேரியை நடத்திக்காட்டிய இசைமேதை. மாண்டலின் ஸ்ரீனிவாஸ்! அவர் மறைந்த பிறகு ஒவ்வொரு வருடமும்  அவரது பிறந்தநாளான பிப்ரவரி 28 அன்று, ஸ்ரீனிவாஸின் நினைவைப் போற்றும்வகையில் இரண்டு இசைக் கலைஞர்களை விருதும், ஒரு லட்ச ரூபாய் வெகுமதியும் கொடுத்து கௌரவிக்கிறார்கள் அவரின் குடும்பத்தினர். இந்த வருடம் அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் மியூசிக் அகாடமியில் இன்னும் சிறப்பாக நடந்தேறியது அந்நிகழ்வு. அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன் உட்பட பலர் அன்றைய விழாவுக்கு வந்து ஸ்ரீனிவாஸுடனான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீனிவாஸின் தம்பியாக இல்லாமல் அவரின் சீடராகவே தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார் மாண்டலின் ராஜேஷ். அன்றும் அப்படியே. பேச்சுக்குப் பேச்சு ‘குரு... குரு’ என்று அண்ணனைக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியை நடத்தும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ்-இன் இயக்குநர் இளங்கோ குமணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close