ஏற்றம் காணும் இந்திரா நூயி! | Successful woman Indra Nooyi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

ஏற்றம் காணும் இந்திரா நூயி!

ல்வியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் ஒரு பெண்ணை எந்தளவுக்குச் சிகரமேற்றும் என்பதற்கு உதாரணம், இந்திரா நூயி. ஜான்சன் அண்டு ஜான்சன், பெப்சிகோ என்று பாய்ந்த இந்த சென்னைப் பெண்ணின் கிராப்(Graph), இப்போது லேண்ட் ஆகியிருப்பது  அமேஸானில்!

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்சி, கொல்கத்தா ஐஐஎம்-ல் எம்பிஏ என்று தன் அஸ்திவாரத்தை பலமாகப் போட்ட இந்திரா, படிக்கும்போதே பகுதி நேரமாக வரவேற்பாளர் வேலைபார்த்தார். ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக அடியெடுத்து வைத்தவர், தொடர்ந்து சில நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், கார்ப்பரேட் உலகின் போட்டியைச் சமாளிக்க, தன்னை இன்னும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றார். வாழ்க்கை இந்திராவுக்கு மீண்டும் ‘அ’விலிருந்து ஆரம்பித்தது. வேலை தேடத் தொடங்கியவர், 1994-ல்  பெப்சி குளிர்பான நிறுவனத்தில் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் துணைத்தலைவர் பதவிவரை பயணித்தார்.

[X] Close

[X] Close