மீண்ட அபிநந்தன்... போராட்டத்தின் கதை! | The story behind release of abhinandan from Pak - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

மீண்ட அபிநந்தன்... போராட்டத்தின் கதை!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பிப்ரவரி 26. அதிகாலை 3:30 மணி...

பாகிஸ்தானின் கைபர் பக்டுன்கவா மாநிலத்திலுள்ள பாலாகோட் நகரம், இன்னும் சிறிது நேரத்தில் உலகத் தலைப்புச் செய்திகளில் இடம்பெறப்போவதை அறியாமல் உறங்கிக்கொண்டிருந்தது. இரையை நோக்கி நகரும் புலிகளாக, ரேடாரில் எந்த சத்தமும் எழுப்பாமல், இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஊடுருவின.

பாலாகோட் அருகேயிருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தீவிரவாத முகாம்கள்தாம் இலக்கு. இஸ்ரேல் தயாரிப்பான ‘ஸ்பைஸ் 2000’ ரக ஏவுகணைகளை, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் செலுத்திய நான்கு மிராஜ் விமானங்கள், தீவிரவாதிகளின் முகாம்களைத் துவம்சம் செய்தன. பேய் வேகத்தில் நடைபெற்ற இத்தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் விமானப்படை, சுதாரித்து எழுவதற்குள் இந்திய விமானப்படையின் விமானங்கள் நமது வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தன.

[X] Close

[X] Close