இதோ இன்னொரு இசைத்தமிழன்! | Lydian From Chennai Made Us Proud In An International Reality Show - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

இதோ இன்னொரு இசைத்தமிழன்!

மெரிக்காவில், ரம்மியமான ஒளி படர்ந்த ஓர் இசை அரங்கம்... அங்கு பியானோவில் விளையாடு கின்றன லிடியனின் விரல்கள்.. அந்த ரியாலிட்டி ஷோவுக்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட, சின்னப் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்கிறான் தமிழ்ச்சிறுவன் லிடியன் நாதஸ்வரன். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து லிடியனுக்கு வாழ்த்துச் சொல்ல, வைரல் ஆனது அந்த வீடியோ. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள லிடியனின் வீட்டுக்குச் சென்றேன்.

லிடியனின் அம்மா ஜான்ஸி, “என் கணவர் சதிஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர். அதனால் சின்ன வயசிலிருந்தே என் குழந்தைகளுக்கும் இசை மீது ஆர்வம் வர ஆரம்பிச்சது. லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினி ரெண்டு வயசில் பேச ஆரம்பிக்கும் போதே பாடவும் ஆரம்பிச்சுட்டா.  என் குழந்தைகள் பொம்மைகளைவிட, இசைக்கருவிகள் கூடதான் அதிகம் விளையாடியிருக்காங்க. லிடியனுக்கு ரெண்டு வயசானப்போ, அவங்க அப்பா அடிக்கும் டிரம்ஸ் பீட்டை அப்படியே ரிப்பீட் பண்ணுவான். எங்க ரெண்டு பசங்களுமே கே.ஜி வகுப்புகள்வரைதான் ஸ்கூலுக்குப் போனாங்க. படிப்பைவிட இசை மேல ஆர்வம் இருக்குற பசங்களுக்கு ஏன் படிப்பைத் திணிக்கணும்னு, படிப்பை நிறுத்திட்டோம்” - என்று சர்ப்ரைஸ் கொடுத்த ஜான்ஸியைத் தொடர்ந்தார் சதிஷ் வர்ஷன்.

[X] Close

[X] Close