“தலைவர் ஆசையில் தப்பில்லையே?” | Interview with India politician Peter Alphonse - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

“தலைவர் ஆசையில் தப்பில்லையே?”

காங்கிரஸ் கட்சிக்குத் தி.மு.க 10 தொகுதிகளை ஒதுக்கியிருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். அவருடன் ஓர் அரசியல் சந்திப்பு...

‘`காங்கிரஸ் கட்சிமீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி வரும் பி.ஜே.பி அரசுமீது, ரபேல் தவிர மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எதையும் நீங்கள் வைக்க முடியவில்லையே?’’

‘`பண மதிப்பிழப்பு நடவடிக்கையே மிகப்பெரிய ஊழல்தானே..! அந்தச் சமயத்தில் மட்டும் குஜராத்தில் பெரும் அளவில் பணம் மாற்றியவர்கள் யார், யார்... எந்த வங்கிகளின் மூலமாக அவை மாற்றப்பட்டன? ஊழல் செய்வதற்கான கதவுகளைத் திறந்துவிடுவதே ஊழல்தானே...?

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஊழல் அரசுதானே? ஆக, அவர்களோடு பி.ஜே.பி கூட்டணி சேர்ந்திருப்பது, ‘தமிழகத்தில் மட்டும் அவுட்சோர்ஸ் ஊழல்’ என்ற அடிப்படையில்தானே?

[X] Close

[X] Close