இறையுதிர் காடு - 14 | Iraiyuthir kaadu: Indra Soundar Rajan series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

இறையுதிர் காடு - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று கார்மேகக்கிழார் எழுத்தாணியோடு எழுதத் தயாராகவும், போகரும் காயகற்பம் பற்றிக் கூறத் தொடங்கினார்.

``கிழாரே, முதலில் நான் சொல்வதை நன்கு மனதில் வாங்கிக்கொள்ளும். பிறகு பாட்டாக அதைப் பதிவுசெய்யும். உரைநடைப் பதிவு இம்மட்டில் கூடாது’’ என்றார்.

``அதன் காரணம் நான் அறியலாமோ?’’ என்று கேட்டார் கிழார்.

``தாராளமாய்... பாடலாக எழுதும்போது இலக்கண உபகாரம் தேவைப்படும். சந்தங்கள் இதனால் உருவாகும். மொழியின் இனித்த தன்மை, கவிதையில் வெளிப்படும் அளவு உரைநடையில் வெளிப்படாது. எனவே, பாடல் எனும்போது இலக்கணக்கட்டு, சந்தம், இனிமை இவையெல்லாம் வந்துவிடுகின்றன. மிக முக்கியமாக, கூற வந்த கருத்தை இன்னொருவர் உள்புகுந்து திரித்து மாற்ற முடியாது’’ - போகரின் எச்சரிக்கை உணர்வு, கிழாரை அவர் தாடியை நீவிக்கொண்டு எழுத்தாணியை விரல் நுனியில் வட்டமாய்ச் சுழற்றிப்பார்க்கச் செய்தது.

``என்ன பார்க்கிறீர்... இப்போது உரைநடையில் ஒரு கருத்தைக் கூறிவிட்டு பிறகு பாடலாகவும் கூறுகிறேன். பிறகு அந்தக் கருத்துக்குள் புகுந்து நானே வேறு ஒரு கருத்தைப் புகுத்தி மாற்றியும் காட்டுகிறேன். உரைநடைக்குள் இது எளிதாகிவிடும். ஆனால் பாடல், நான் அவ்வாறு செயல்பட சுலபத்தில் அனுமதிக்காது. என் மருத்துவக் கருத்துகள் உரைநடையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அது பாடல் வடிவம்கொள்வதே சிறந்தது. உரைநடைக்குள் என் மாற்றங்களைப் பார்க்கிறீர்களா?’’

[X] Close

[X] Close