வலைபாயுதே | Social media hot shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

வலைபாயுதே

facebook.com/கே.என்.சிவராமன்

மாநகரப் பேருந்து அல்லது மின்சார ரயிலில் தான் தினமும் அலுவலகம் செல்வதும் திரும்புவதும்.

ஜெயலலிதா காலத்தில் வாங்கிப் புழக்கத்தில் விடப்பட்ட பேருந்துகள் அனைத்தும் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டவை. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களால் மட்டுமே அமர முடியும். அப்படியும் கால் மூட்டு முந்தைய சீட்டில் இடிக்கும். எனில் நடுத்தர மற்றும் தாட்டியான உடல்வாகு கொண்டவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.  இப்போது எடப்பாடி ஆட்சியில் புதிதாகப் பேருந்துகளை வாங்கி, சிவப்பு வர்ணம் பூசி பல்வேறு தடங்களில் ஓட விட்டிருக்கிறார்கள்.

இன்று மாலைதான் அப்புதிய பேருந்துகளில் ஒன்றில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது. இருக்கைகள் போதுமான அகலத்துடனும் கால் மூட்டு இடிக்காத விதத்திலும் இருக்கின்றன. தாட்டியான உடல்வாகு கொண்டவர்களும் சிரமமின்றி அமரலாம். வடிவமைத்தவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். ஆனால், இந்தப் பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்திருக்கிறதே மாநில அரசு... எடுத்துச் சொல்லி வாங்க வைத்திருக்கிறார்களே போக்குவரத்துத் துறை அதிகாரிகள்... அவர்கள் அனைவரும் சாடிஸ்டுகள்.

வேறெப்படி அழைக்க? குரூர மனம் படைத்தவர்களால் மட்டுமே தொலைதூரப் பயணத்துக்காக வடிவமைக்கப் பட்ட இப்பேருந்துகளை மாநகர வழித்தடங்களில் இயக்க அனுமதி வழங்கியிருக்க முடியும். நடத்துநருக்கு இருக்கையே இல்லை. 8 மணி நேர வேலை. அத்தனை நேரமும் அவர் நிற்கத்தான் வேண்டும்.

[X] Close

[X] Close