கடிதங்கள்: அழகும் அர்த்தமுள்ளதும்... | Readers Comments - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

கடிதங்கள்: அழகும் அர்த்தமுள்ளதும்...

எளிய மனிதர்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் நான்காம் சுவரின் சுவை கூடிக் கொண்டே போகிறது.
- ராபா, காஞ்சி.

அட்டைப் படம் அட்டகாசம். விஜய் சேதுபதி என்று நம்பவே முடியவில்லை.
- பத்மஜா சௌந்தர்ராஜன், மயிலாடுதுறை.

சொல்வனத்தின் ‘விசை’ கவிதை  பல எண்ண ஓட்டங்களை விதைத்தது.
- என். பாலகிருஷ்ணன், மதுரை.

கரு. பழனியப்பன் பேட்டியும், பிரேம் டாவின்ஸி வரைந்த அவர் ஓவியமும் அழகும், அர்த்த முள்ளதாகவும் இருந்தன.
- ஷ்யாமளா ரங்கன், மந்தைவெளி.

அருந்ததி ராயின் பேட்டியில் அவர் சொல்லியிருந்த  “யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?” என்ற கேள்வி, பலரும் விவாதம் செய்ய வேண்டிய ஒரு கருத்து. முக்கியமாக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் டிவியில் இதை விவாதித்து, இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒளிபரப்பினால் எழுத்தாளர்கள் சமூகத்துக்கு என்னென்ன செய்யலாம், செய்யவேண்டும், செய்திருக்கிறார்கள் என்று பல விஷயங்கள் அறியவரும். குறிப்பு: பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
- சரவணவேல், பல்லாவரம்.

அ.முத்துலிங்கம் கதைக்கு ஷ்யாமின் ஓவியங்கள், நிஜமாகவே பலர் தங்கள் பேஸ்புக் ப்ரொபைல் படமாக வைத்துக்கொள்ளலாம்!
- ஆதி மூலகிருஷ்ணன், அம்பாசமுத்திரம்.

காட்டுத்தீ ஏற்படுவதற்கு முழுக்காரணமும் மனிதர்களே. உயிர்ச்சூழலை அழிப்பதில் அவர்களுக்கு அப்படி என்னதான் இன்பமோ!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்’ கட்டுரை மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. தங்கள் சுயலாபத்துக்காக கார்ப்பரேட்டுகளை வளர்த்து விட்ட அரசியல்வாதிகளின் குடுமி இப்போது கார்ப்பரேட்டுகள் கையில். அரசியல்வாதிகள் தலையிலேயே கார்ப்பரேட்டுகள் கைவைக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
- ப. மூர்த்தி, பெங்களூரு.

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசும் பிரேமலதா போன்றவர்களால் கட்சி காணாமல் போவது உறுதி.
- அஷோக், vikatan.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close