“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!” | Interview with Indian-born French actress Kalki Koechlin - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“பால்யத்தின் கைவிடலுக்கும்
மூப்பின் களைப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வின் சோர்விற்கு நடுவே
நம் படுக்கையின் கதகதப்பில்
இவ்விருளினூடே எங்கோ தூரத்தில்
இரைச்சல்கள் அனைத்தையும் கடந்து
நாம் செவிடாக்கப்படுகிறோம்
நம் குரலின் அமைதியால்.”


- கல்கி கோச்சலினின் `இரைச்சல்’ (Noise) பாடல் தொகுப்பிலிருந்து...

டிகை, மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் கல்கி கோச்சலின். பால் சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு என, சமூகச் சிக்கல்களின்போதும் குரல் கொடுப்பவர். ‘எம்மா அண்டு ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கோவளம் கடற்கரையில் நடித்துக்கொண்டிருந்தவரிடம் உரையாடினோம்.

நடிகையாக  உங்களுடைய  பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

“நடிகர்களுக்கு மேடை நாடகங்களிலிருந்து தங்கள் பயணம் தொடங்குவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எனக்கு அது கிடைத்தது. நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அங்கு  கண்டடையலாம். திரைப்படம் முற்றிலும் வேறு வகையான களம். அது இயக்குநர்களின் மீடியம். இரண்டிற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். எனக்குப் பிடித்த, அதே சமயம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக நம்புகிறேன்.” 

[X] Close

[X] Close