அடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019 | Discuss about 17th Parliament Election - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

அடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019

தொடங்கிவிட்டது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா. இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்து, பந்தக்கால் நட்டுவிட்டது, தேர்தல் ஆணையம். இனி அடுத்த இரு மாதங்களிலும் கொண்டாட்டங்களுக்கும் கோலாகலங்களுக்கும் பஞ்சமிருக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் என்பது இன்னும் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

மே 23 அன்று விடை தெரியும் வரை, 130 கோடி மக்களின் அன்றாடப் பேச்சுகளையும், செயல் களையும் தேர்தலே ஆக்கிரமிக்கும். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மோடியின் ஐந்தாண்டுக்கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கப்போகும் மதிப்பெண் என்ன என்ற எதிர் பார்ப்பு, எதிர்க் கட்சிகளுக்கு மோடியை வீழ்த்தும் வாய்ப்பு, தமிழகத்தில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்  தங்கள் பலத்தை நிரூபிக்கும் களம், தினகரன், கமல்ஹாசன் போன்றோருக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் என்று இந்த ஜனநாயக மல்யுத்தம், எல்லாக் கட்சிகளுக்குமான ‘தில் யுத்தம்’தான்!

[X] Close

[X] Close