கொள்கை இல்லையென்று கொட்டு முரசே! | DMDK Political Stance in Various Period - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

கொள்கை இல்லையென்று கொட்டு முரசே!

ப்போதுமே கொள்கையுள்ள கட்சிகளுக்குத்தான் நெருக்கடி அதிகம். தங்கள் நிலைப் பாடுகளை அந்தக் கட்சிகள் மாற்றிக்கொள்ளும்போது, விளக்கம் கொடுக்கவேண்டிய, நியாயப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. ஆனால், கொள்கையே இல்லாத கட்சிகளுக்கு அந்தச் ‘சுமை’ இல்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சிதான் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.

காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றும் தங்களுக்கு என்று சில அடிப்படையான கொள்கைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள். 1972-ல் எம்.ஜி.ஆர், தி.மு.க-வை விட்டு வெளியேறி `அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தை ஆரம்பித்தபோது, அவரிடம் ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லை. ஒருகட்டத்தில் அண்ணாயிசம்தான் தங்கள் கட்சியின் கொள்கை என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். ‘கொஞ்சம் கேப்பிட்டலிசம், கொஞ்சம் கம்யூனிசம், அதுதான் அண்ணாயிசம்’ என்ற எம்.ஜி.ஆரின் வரையறையை, அண்ணாவே உயிருடன் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன என்று எம்.ஜி.ஆர் எதையும் உறுதியாகச் சொல்லவில்லை. ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்து வந்த அழுத்தங்களால், தன் கட்சியின் பெயரையே ‘அனைத்திந்திய அண்ணா தி.மு.க’ என்று மாற்றினார். திராவிட இயக்கத்துக்கு மூலமாக அமைந்த நீதிக்கட்சியும் சரி, பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் சரி, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய இயக்கங்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ திராவிட அரசியலுக்கு மாறாக ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை’க் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த ‘இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு’ என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்ததை யொட்டி ‘இட ஒதுக்கீட்டில் உச்ச வரம்பு’ என்பதைத் திரும்பப்பெற்ற எம்.ஜி.ஆர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் அதிகரித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close