கேம் சேஞ்சர்ஸ் - 29 - Raw Pressery | Game Changers - Raw Pressery - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 29 - Raw Pressery

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்ற வாரம் Furlenco ஸ்டார்ட் அப் பற்றி வாசித்தவர்களில் பலர் தங்கள் ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஸ்டார்ட் அப் நிறுவனர் அது பற்றிச் சொல்லும்போது “Furlenco-ல இந்தி நடிகர் ஆமீர் கான் முதலீடு செய்திருக்கிறார். அதையும் எழுதியிருக்கலாம். பிரபலங்கள் செய்யும் இது போன்ற விஷயங்கள் பொதுமக்களுக்கு ஸ்டார்ட் அப்கள் மீதிருக்கும் அச்சத்தைப் போக்கும்” என்றார். ஆமீர் கான் மட்டுமல்ல; பாலிவுட்டின் ஹ்ரிதிக் ரோஷனில் தொடங்கி ஹாலிவுட்டின் லியானார்டோ டி காப்ரியோ வரை பலர் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கின்றனர்.

பேசும்போது அவர்  “மக்களுக்கு இன்னும் ஸ்டார்ட் அப் மீதான அச்சம் இருக்கிறதா?” என்றொரு ஐயத்தை எழுப்பினார். நிச்சயம் இல்லை அல்லது வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரபலங்களைத் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தியதும் ஒரு காரணம். பிக் பாஸ்கெட் மற்றும் பைஜூக்கு ஷாரூக் கான், ஊபருக்கு விராட் கோலி என நிறைய உதாரணங்கள் உண்டு.

‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தந்தை’ எனச் சொல்வார்கள். பல ஸ்டார்ட் அப்களின் தொடக்கமும் அப்படி இருந்திருப்பதை இத்தொடரில் நாம் பார்த்தோம். சில சமயம் தொழில் ஆர்வம் இல்லாத, முதலீட்டையே தொழிலாகக் கொள்ளாத பலரும் சில சேவைகளையோ, பொருள்களையோ பயன்படுத்திவிட்டு அது தந்த திருப்தி காரணமாக அந்த ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வதுண்டு. இதில் மேலே சொன்ன சினிமா பிரபலங்களும் அடக்கம். அதிலொருவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close