மருத்துவம்: படிப்புகள் பலவிதம்! | Medical education: Course and careers - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மிழ்நாட்டில் தடுக்கி விழுந்தாலும் பொறியியல் படித்தவர்கள்மீது விழும் அளவுக்கு இன்ஜினீயர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்கள் விகிதம் 11,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலுமே உள்ளது. ஆயிரம் பேருக்கு ஒரு அரசு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார மையம். இதனால் மருத்துவப் படிப்புக்குத் தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு 6,000 இடங்கள் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ம் ஆண்டில் 83 ஆயிரம்  பேரும், 2018-ம் ஆண்டில் 1.17 லட்சம் பேரும் தேர்வெழுதியுள்ளனர்.  இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் தேர்வெழுத விண்ணப்பித் துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு மாற்றாக மருத்துவத்துறையில் கால்பதிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து, கல்வியாளர் ராஜராஜனிடம் பேசினோம்.