சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

சொல்வனம்

ஓவியம்: சிவபாலன்

வெற்றிடம்

நுரைத்துப் பொங்கி
சுழித்தோடிய ஆற்றின்
கரையையொட்டி வளர்ந்திருக்கும்
ஆலமர விழுதுகளில்
உறைந்துகிடக்கின்றன
விளையாட்டுச் சிறுவர்களின்
பிஞ்சு ரேகைகள்.
இப்போதும்
சுழித்தோடுகிறது ஆறு
கானல் நீர் சுமந்து.
பால்யங்கள் தழுவாத
வெற்றிடமாய் விம்முகிறது
ஆற்றங்கரை.

- தி.சிவசங்கரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க